பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

ரஜினி கட்சியின் அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்திக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வரும் புத்தாண்டு 2021 -ல் முதல் தேதி அன்று கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினி நேற்று அறிவித்தார்.


மேலும் பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக உள்ள அர்ஜூன மூர்த்தியை தனது கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகர் ரஜினி நியமித்துள்ளார்.மேலும், தனது கட்சியில், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

கடந்த காலத்தில் திமுக எம்.பி முரசொலிமாறனுக்கு உதவியாளராக இருந்தார் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.


ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக எம்பி தயாநிதி மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில், சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அர்ஜுன மூர்த்தி எனது தந்தை முரசொலி மாறனின் உதவியாளர் என்றும் ஆலோசகர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன. அது தவறான தகவல் என எனவே இதுபோன்ற பொய் தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்