பரந்தூர் விமானநிலையம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

Filed under: சென்னை |

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் அருகே அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பரந்தூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. விமான போக்குவரத்து வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து சர்வதேச நிறுவனங்கள் பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.