பரிசாக விலை உயர்ந்த கார்!

Filed under: சினிமா |

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், விக்ரம் ஆகியோர் நடித்திருந்த படம் “விக்ரம்.” தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம். இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என கூறப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு Lexus கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.