பலராமனை காவலில் எடுத்த காவல்துறை!

Filed under: அரசியல்,தமிழகம் |

பலராமன் என்பவர் கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது ஒரு நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அவர் தனது குடும்ப நண்பராக இருந்த அழகப்பன் என்பவர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததாக புகாரளித்திருந்தார். இப்புகார் குறித்து தனக்கு பாஜக எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதால் அவர் கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. கௌதமி அளித்த புகாரியின் அடிப்படையில் பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தலைமறைவாக உள்ள அழகப்பன் என்பவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பலராமனை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.