அமைச்சர் அன்பில் மகேஷ் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நாட்கள் தவிர மீத நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.