பாஜக தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

Filed under: இந்தியா |

பாஜக தொண்டர் வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் பாஜக தொண்டர் சந்தோஷ் வீட்டில் சமையலறையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் சந்தோஷ் கையில் மட்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து விசாரணை செய்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு சதி வேலை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.