பான் கார்டையும் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்!

Filed under: இந்தியா |

சென்னை, மார்ச் 31-

பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை கூறியுள்ளது.


இதற்கான கால அவகாசத்தை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து வருமானவரித்துறை நீட்டித்து வந்தது. இந்த இணைப்புக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்றைக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத கணக்குகளின் பான் எண் செயலிழந்துவிடும் என்றும், இதற்கு பின் பான் எண்ணை புதுப்பிக்கவும், ஆதார் எண்ணை இணைக்கவும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது வருமானவரித்துறை.
ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்தால் அபராதமாக ரூ.500ம், இந்த காலக்கெடுக்குள் இணைக்காவிட்டால் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.