பாலியல் தொல்லைக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனை!

Filed under: உலகம் |

நீதிமன்றம் 4 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக ஒருவருக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 37 வயது மார்ட்டின் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இத்தீர்ப்பில் 4 வயது குழந்தையை ஆபாச படங்கள் தயாரிக்க மார்ட்டின் முயற்சி செய்ததாகவும் மேலும் அவர் குழந்தைகள் ஆபாச படத்தை வைத்திருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மார்ட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அளித்துள்ளது. இத்தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.