பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

Filed under: தமிழகம் |

பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றி கூறிய அமைச்சர் நாசர், “ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.