பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் நடத்தப்போவது யார் தெரியுமா. மாஸ் காட்டும் விஜய் டிவி!

Filed under: சினிமா |

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் நடத்தப்போவது யார் தெரியுமா. மாஸ் காட்டும் விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கமல்ஹாசன் நடத்தப்போது இல்லை என்றும் அவருக்கு பதிலாக சிம்பு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

இந்த 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியும் சுறுசுறுப்பாக சென்றது. இந்நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 5 நடக்க உள்ளது. இதற்கிடையே தொகுப்பாளர் கமல் ஹாசன் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். அவர் இனி தீவிர அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். ஆகையால், பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் நடத்த இயலாத சூழல் உருவாகி இருக்கிறது.

இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடத்த தயாரிப்பாளர்கள் கமல்ஹாசனுக்கு பதில் சிம்புவை வைத்து நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு சிம்பு தரப்பிலும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ‘பத்து தல’படத்திலும் நடிக்கிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அவர் நடத்துவார் என கூறப்படுகிறது.