பிபிசி ஆவணப்படம் திரையிட சென்னை பல்கலை தடை!

Filed under: சென்னை |

பிபிசி ஆவண திரைப்படம் ஒன்றை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் பிரிவு ஒன்று திரையிட முயற்சி செய்தது. ஆனால் அத்திரைப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

நேற்று சென்னை மாநில கல்லூரியில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தொடர்ந்து எதிர்ப்பு ஆதரவும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திலும் பிவிசி ஆவணப்படம் திரையிட மாணவர்களின் ஒரு பிரிவு முடிவு செய்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பு சார்பில் ஆவணப்படத்தை திரையிட முயற்சித்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.