பிரபல நடிகை மீது வழக்கு!

Filed under: சினிமா |

“காதலில் சொதப்புவது எப்படி”, “வாயை மூடி பேசவும்” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் குறும்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த இயக்குனர்களில் ஒருவர்.

அதன் பின்னர் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் உருவாகிய “மாரி” மற்றும் “மாரி 2” ஆகிய இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இது சம்மந்தமான தெலுங்கு தொலைக்காட்சி நடிகை கல்பிகா, தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவதூறு செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது சம்மந்தமாக பாலாஜி மோகன் தொடர்ந்த வழக்கு ஒன்றில் “தன்யா பாலகிருஷ்ணனை நான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு செய்து கல்பிகா பேசி வருவதற்கு தடைவிதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன் பற்றி பேசுவதற்கு தடை விதிப்பதாகவும், இந்த மனுவுக்கு ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.