பிரேக் அப் ஆன பிரபல நடிகையின் காதல்!

Filed under: சினிமா |

பிரபல நடிகை கியாரா அத்வானி தனது காதலருடன் பிரேக் அப் என்று கூறப்பட்ட நிலையில் அவரது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகை கியார அத்வானி இந்தி சினிமா உலகில் பிரபலமானவர். இவர் ஷங்கர் இயகத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால், திடீரென்று இவர்களின் காதல் பிரெக் ஆப் ஆனதாக தகவல்கள் வெளியானது. இதனால் இருவரின் ரசிக்ர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கியாரா அத்வானி மற்றும் சித்தார்த மல்கோத்ரா இருவரும் நேற்று படம் ஒன்றின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில், இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.