பில்கேட்ஸின் அதிரடி முடிவு!

Filed under: உலகம் |

பில்கேட்ஸ் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் நன்கொடையாக வழங்க முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பில் மற்றும் மெலிண்டா என்ற அறக்கட்டளையை பில்கேட்ஸ் ஆரம்பித்து அதற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். “எதிர்காலத்தில் எனது குடும்பத்திற்கு நான் என்னுடைய பணத்தை செலவழிப்பதை விட அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன். இதை நான் தியாகமாக நினைக்கவில்லை. உலக மக்கள் பெரும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இதை எனது கடமையாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.