புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள்!

Filed under: சென்னை |

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை புறநகர் ரயிலில் தற்போது சாதாரண பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்காக தென்னக ரயில்வே உடன் கூட்டுச்சேர்ந்து முயற்சிகள் நடைபெறும் என்றும் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி வேறு எந்த வசதிகள் பயணிகளுக்கு தேவைப்பட்டாலும் அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.