பெங்களூரு அணி கேப்டன் தோனிக்கு புகழாரம்!

Filed under: விளையாட்டு |

பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளஸ்சிஸ் “தோனி எங்கு இருக்கின்றாரோ அங்கு அவர் தான் கேப்டன்” என்று கூறியுள்ளார்.

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி இன்று நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை தோனியின் தலைமையில் விளையாடியை டூபிளஸ்சிஸ் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு தலைமையேற்று தோனியை எதிர்க்கவுள்ளார். இந்த போட்டி குரு சிஷ்யனுக்கு இடையே நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது
இந்நிலையில் தோனியின் சென்னை அணியுடன் மோதும் டூபிளஸ்சிஸ் பேட்டியில் கூறும் போது, “தோனி எங்கு இருக்கிறாரோ அங்கு அவர் தான் கேப்டன், சென்னை அணியில் இரண்டு ஆச்சரியங்கள் நடந்துள்ளது, ஒன்று தொடரின் தொடக்கத்தில் கேப்டன் மாற்றப்பட்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்தது, மற்றொன்று தொடரில் பாதியில் கேப்டன் மாற்றி மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதில் மறைக்க ஒன்றுமில்லை, தோனி இருந்தால் அங்கு அவர் தான் கேப்டன். சென்னை அணியின் வெற்றி சரித்திரத்தில் அவரின் பங்களிப்பே முழு காரணம்” என்றும் கூறியுள்ளார்.