பெருவில் நூதன சம்பவம்!

Filed under: உலகம் |

போதை பொருள் விற்பனை செய்த கும்பலை பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் சென்று போலீஸ் கைது செய்துள்ளனர்.

போதை பொருள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் போதை வஸ்துகள் உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவ்வப்போது அந்நாட்டு போலீஸ் குற்றவாளிகள் சிலரை பிடித்தாலும் போதை பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. போலீசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப போதை பொருள் கும்பலும் அப்டேட்டாகி விடுகின்றன. அவர்களை பிடிக்க போலீசும் புதிய முறைகளை கையாள்வது வழக்கமாகியுள்ளது. பெருவில் போதை பொருள் விற்கப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட பகுதிக்கு பெரு போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்றுள்ளனர். அங்கு சாதுர்யமாக செயல்பட்டு போதை பொருள் விற்கும் ஆசாமிகளை கைது செய்துள்ளனர். போதை கும்பலை பிடிக்க போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.