கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சு வார்தையில் வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக சில முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன், தனுஷின் ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.