பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பா?

Filed under: தமிழகம் |

பள்ளி கல்வித்துறை நேற்று தொடங்கிய +2 பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அறிவித்திருந்தது.

நேற்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. நேற்று +2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே நேற்று தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மறு வாய்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.