பொள்ளாச்சியில் பிரதமர் பிறந்தநாளுக்கு எதிர்ப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

பொள்ளாச்சியில் கடைவீதி உரிமையாளர்கள் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு எதிர்ப்ப- தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கடை அடைப்பு செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன, இப்பகுதியில் ஆட்டோ ஸ்டோண்ட் உள்ளது, பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பிஎம்எஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு அனுமதியின்றி பேனர் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபசுஜிதா தலைமையில் கிழக்கு காவல்நிலையா ஆய்வாளர் ஆனந்தகுமார் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், நிர்வாகிகள் பேனர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அகற்றினர், இருதரப்பினர் பேச்சுவார்த்தை சுமூகம் ஏற்பட்டதின்பேரில் கடைகள் திறக்கப்பட்டனர், இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது.