ரயில்வே துறை போதுமான பயணிகள் வரவில்லை என்பதால் தமிழகத்திலுள்ள ஒரு ரயில் நிலையத்தை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கரூர் சேலம் வழித்தடத்தில் வாங்கல் என்ற ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் இன்று முதல் அதாவது ஜனவரி 25ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் போதிய பயணிகள் இல்லை என்றும் அதன் காரணமாக இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயணிகளுக்கு இந்த ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கப்படாது என்றும் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.