போராட்டத்தில் மோடியின் சகோதரர்!

Filed under: அரசியல் |

இன்று டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார்.

பாஜக அரசு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இப்போராட்டத்தில், நியாய விலைக்கடை சங்கத்தின் துணை தலைவராகப் பதவி வசிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.