மகாத்மா காந்தி பிறந்தநாள்: தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, அக் 2:
மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மரியாதை செலுத்தினர்.

காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில், நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, லோக்சபா எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.