மத்திய அரசின் அறிவிப்புக்கு காரணம் எங்கள் போராட்டமே!

Filed under: தமிழகம் |

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்னூரில் விவசாய நிலங்களை பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எங்களது போராட்டமே காரணம் என தெரிவித்துள்ளார்.

அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது அறிவாலயம் அரசு. விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்காக தொடர்ந்து தமிழக பாஜக குரல் எழுப்பும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.