மனைவிக்கு 1000 மடங்கு பவர் இருப்பதாக கூறிய அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை விட 1000 மடங்கு தன் மனைவிக்கு பவர்புல்லாக இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடன் என்னை ஒப்பிடவில்லை. ஜெயலலிதா ஒரு தனித்தன்மை உள்ள தலைவர், அவர் தவறான முடிவு எடுத்தால் கூட அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார். ஏனெனில் அவர் தலைவர். அதே போல் தான் நானும் ஒரு முடிவை எடுத்தால் பின்வாங்க மாட்டேன். அதற்காக நான் ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மையான தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்வதற்காக ஜெயலலிதாவை கூறினேன். என்னை பொருத்தவரை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் ஒரு தலைவிதான். என் தாயார் ஜெயலலிதாவை 100 மடங்கு பவர்புல், என் மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு பவர்புல்” என்று கூறியுள்ளார். அவரது இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.