மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி!

Filed under: சினிமா |

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், மாதவன், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்தை மணிகண்டன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே “காக்காமுட்டை” உட்பட படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.