மாட்டுக்கறி திங்கறது அசிங்கம்னா, மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா.. விளாசிய சீமான்!

Filed under: அரசியல் |

மாட்டுக்கறி திங்கறது அசிங்கம்னா, மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா.. விளாசிய சீமான்!

சீமான் நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டார்

சென்னை: “மாட்டுக்கறி திங்கறது அசிங்கம்னா, மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா இருக்கா? என்ன கொடுமை இது…” என்று சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.அந்த வகையில் நாகர்கோவிலில் நேற்று உரையாற்றினார். அப்போது, அவர் சொன்னதாவது:

இந்த தேசத்தில் எல்லாம் தனியார் மயம்.. சாலையில் பெயர் தேசிய நெடுஞ்சாலை, போடறது பூராவும் தனியார் முதலாளி. நான் இந்த நாட்டின் குடிமகன்.. எனக்கன்று ஒரு பொதுச்சொத்து இந்த நாட்டில் என்ன இருக்கு? ஒன்னுமில்லை.. சுடுகாடு மட்டும்தான் இருக்கு.. அதுவும் எல்லாருக்கும் பொதுவாக இல்லை.. சில சாதிகளுக்கு சுடுகாடே இல்லை.

எச்.ராஜா

நான் ஏன் திருவொற்றியூரில் போய் நிக்கறேன்.. என் சொந்த ஊர் காரைக்குடியில் நின்னிருப்பேன்..அது என் சொந்த தொகுதி.. எச்.ராஜா நிக்கிறார், இன்னொருத்தர் காங்கிரஸில் நிற்கிறார்.. கதற விட்டிருப்பேன்.. கதற விட்டிருப்பேன்.. சொந்த ஊர் வேற, அதனால் கதற விட்டிருப்பேன்.

துறைமுகம்

ஆனாலும் திருவொற்றியூரில் நிற்க காரணம், பொன்னேரியில் இருக்கும் காட்டுப்பள்ளியில், அதானி கட்டப்போகும் புதிய தறைமுகத்தின் நீட்சி எண்ணூர் வரை வருது.. எண்ணூர் என் தொகுதிக்குள்ள வருது.. அதனால நின்னு சண்டை செய்யணும்.. அதானி கூட சண்டை போடணும்.. அந்த துறைமுகத்தை துரத்தணும்.. அதுக்குதான். திருவெற்றியூர், என் வெற்றியூர்.. இது உறுதியாக நடக்கும்.

காங்கிரஸ்

திருப்பி திருப்பி இதே கட்சிகளுக்கு ஓட்ட போடாதீங்க.. பழகிடுச்சுன்னு சொல்லாதீங்க.. அப்போ அறிவு எதுக்கு இருக்கு? சிந்திக்கத்தானே? எல்லாரும் செய்யறதால ஒரு தவறு சரி ஆயிடாது.. இத்தனை வருஷம் காங்கிரசுக்கு ஓட்டு போட்டீங்க.. மிதவா கட்சியா அது? ஐயோ உங்களுக்கு புரியவே புரியலயா.. பாபர் மசூதியை இடிச்சவன்தான் ஆர்எஸ்எஸ், பிஜேபியும்.. அதை இடிக்க அனுமதி தந்தது காங்கிரஸ்..

கவனிச்சீங்களா?

ராமர் கோயிலுக்கு அவங்க அடிக்கல் நாட்டினால், இவங்க வெரிகுட் கங்கிராஜூலேஷன்ஸ்-ன்னு இவங்க சொல்லுவாங்க.. தீர்ப்பு வருவதற்கு முன்னாடி ஒரு சொன்னாங்க கவனிச்சீங்களா, எந்த மாதிரி தீர்ப்பு வந்தாலும் ஏத்துக்கணுமாம்.. தீர்ப்புன்னா நீதி தானே? ஆனால், நீதியே சொல்லல.

திமுக

ஒன்னுமே இல்லாத இந்த பாஜகவை அழைத்து வந்து ஒன்றாக்கியது இந்த திமுகதான்.. இந்த நாட்டில் ஆகச்சிறந்த தலைவர் ஒரே ஒருவர் இருக்கிறார் அவர்தான் ஐயா நல்லகண்ணு.. அவரை சிபி ராதாகிருஷ்ணனை வைத்து தோற்கடித்தது இவங்கதான்.. எச்.ராஜாவை காரைக்குடியில் நிற்க வைத்து, வெல்ல வைத்து, சட்டமன்றத்தக்கு கூட்டிட்டு போனது இவங்கதான்..

மாட்டுக்கறி

மோடி ஏதாவது சொன்னால், அரசு பயப்படலாம், அதிகாரிகள் பயப்படலாம்.. ஆனால் வயித்துக்கு கஞ்சி நாங்க தான் ஊத்தணும் ராஜா.. 24 லட்சம் டன் ஆண்டு ஒன்றுக்கு மாட்டுக்கறியை இந்தியா ஏற்றுமதி செய்யுது.. அதுலதான் வருமானம் அதிகமாக வருது.. மாட்டுக்கறி திங்கறது அசிங்கம்னா, மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா இருக்கா? என்ன கொடுமை இது. முதல்ல நான் ஒன்னு கேட்கிறேன்.. எனக்கான உணவை நீ உறுதி செய், பிறகு என்ன சாப்பிடணும்னு நான் முடிவு செய்கிறேன்” என்றார்.