மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல்!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிராட்வே பகுதியில் உள்ள உரிமம் புதுப்பிக்காத 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி, கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும் வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.