மீண்டும் இணையும் “அஞ்சான்” கூட்டணி!

Filed under: சினிமா |

“அஞ்சான்” திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி படுதோல்வி அடைந்தது.

“அஞ்சான்” திரைப்படத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது “அஞ்சான்.” தற்போது ‘தி வாரியர்’ திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி ரிலீஸூக்கு முன்பே நேர்மறையான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து சூர்யா மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, அவரிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.