முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

Filed under: தமிழகம் |

மறுபடியும் முதலிலிருந்தா…..? ஆமாம் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று இந்த கேள்வியை ஒவ்வொருவர் மனதில் கேட்க வைத்திருக்கிறது.- இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

 

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ் இ என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.

இதே போல் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முக கவசம் கட்டாயம் என்றும், முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.