முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் ரயில் நிலையமருகே பேருந்து ஒன்று மோதியதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகளும் சேதமடைந்தது. வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.