முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப புதிய வசதி செய்து தரவேண்டும் என்றும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.