முதலமைச்சர் ஸ்டாலினின் 5 கோரிக்கைகள்!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் மிக முக்கியமான ஐந்து கோரிககைகளை முன் வைத்துள்ளார்.

* மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் திட்டத்தின் பங்கை திட்டம் முடியும் வரை தொடர வேண்டும்
* மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்
* இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் கொண்டுவரவேண்டும்
* நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலே கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.