முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

Filed under: அரசியல்,தமிழகம் |

எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளதுள்ளார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியின் 18 மாத சாதனைகள் குறித்தும் பொது இடத்தில் விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.