மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

Filed under: சினிமா |

“மூக்குத்தி அம்மன்” திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலிசானது. இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜி.சரவணன் இயக்கியிருந்தார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் இப்போது “மூக்குத்தி அம்மன்” இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதால் அவருக்கு பதில் திரிஷாவை அம்மன் வேடத்தில் நடிக்க மறுத்ததால் இப்போது அந்த வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது சமந்தாவிடமும் இந்த படத்துக்காக பேச்ச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். இந்த பாகத்துக்கு ‘மாசாணி அம்மன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.