நடிகை யாஷிகா ஆனந்த் தனது திருமண செய்தியை சமூகவலைதளத்தில் தெரிவிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்தது. அதனால் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.
இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்துடன் இருந்தார். சிகிச்சையில் முழுவதும் குணமாகிவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் இப்போது திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றிய அவரின் சமூகவலைதளத்தில் “எனது திருமணம் பற்றி உங்களுக்கு சொல்வதில் பெருமகிழ்ச்சி. எனது பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டிய நேரம் இது. நான் எப்போதும் சினிமாவை நேசிக்கிறேன். உங்களை எப்போதும் சந்தோசப்படுத்துவேன். இது பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணம். காதல் எல்லாம் எனக்கு செட் ஆகாது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனக்கு வேண்டும்” என கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள் யாஷிகா….