யுகேஜி மாணவனை தாக்கிய ஆசிரியை!

Filed under: சென்னை |

யூகேஜி படித்து வரும் மாணவன் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவனை தாக்கிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் மாணவர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவனின் தாயார் சமூகவலைதளத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூகேஜி மாணவனை அடித்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மாணவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் இரண்டு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.