ரயில் மறியல் போராட்டம்; செல்வராசு எம்.பி. அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாகை தொகுதி எம்.பி. செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வேத்துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, எனவே, வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்கு, திமுக உட்பட அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.