ரவுடியை கொன்ற சிறுவர்கள் கைது!

Filed under: தமிழகம் |

சிறுவர்கள் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ரவுடியை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 5வது வீதியில் வசிக்கும் சண்முகம் (23) மீது காவல் நிலையத்தில் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 28ம் தேதி அவர் வண்ணாரப்பேட்டைக்குச் சென்றார். அங்கு, சிறுவர்கள் சிலர் ஹண்டிங் மைதானத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்கிய சண்முகம், அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால், சண்முகத்திற்கும், சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த சண்முகம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். உடனே சிறுவர்கள் கற்களை எடுத்து சண்முகத்தை தாக்கினர். கீழே சரிந்து விழுந்த சண்முகத்தின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு, சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையான சண்முகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், 19 வயதுடைய 3 பேர், ஆளா, இளங்கோவன் ஆகிய இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளானர்.