ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமான நிலையத்தில் சேட்டிலைட் செல்போனை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விக்டர் சேமனோவ் (64) டேராடூன் விமான நிலையத்தில் சேட்டிலைட் போனை பயன்படுத்திய, புகைப்படங்கள் எடுத்தார். அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் இதைப் பார்த்து அவரிடம் சேட்டிலைட் போன் பயன்படுத்தியது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர், “சேட்டிலைட் போனை இங்கு பயன்படுத்தக் கூடாது என்பது தனக்குத் தெரியாது” என்று கூறினார். இதையடுத்து, அவர் டேராடூன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்த சேட்டிலைப் போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.