ரஷ்ய நாட்டின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாஸ்கோ புறப்பட்டார் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Filed under: உலகம் |

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை விழித்தி 75ஆம் ஆண்டு வெற்றி விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விமானம் மூலம் ரஷ்யா சென்றார்.

இதில் சீனா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வீ பெங்கும் கலந்து கொள்கிறார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

மேலும், இவர்கள் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த பயணத்தில் ஏவுகணை கட்டமைப்பை இந்தியாவுக்கு விரைவில் கொடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் கேட்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

பின்னர் இந்தியா-ரஷ்யா இடையே ராணுவ உறவை வலிமையாகும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.