ராகுல்காந்தி குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பாரா?

Filed under: இந்தியா |

குளிர்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வரும் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாதயாத்திரை செய்து வருகிறார். சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ராகுல்காந்தி கலந்துகொள்வாரா என கட்சி வட்டாரங்களில் கேள்வி எழும்பியுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது: பாரத் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி மேற்கொண்டு வருவதால், அவரால் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.