ராஜமவுலியின் டுவிட்டர் வீடியோவால் சர்ச்சை!

Filed under: சினிமா |

இயக்குனர் ராஜமவுலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ஆர்ஆர்ஆர் படம் அமெரிக்காவில் திரையிட்ட போது அதற்கு கிடைத்த வரவேற்பை” வீடியோவாக வெளியிட்டுள்ளார். படம் ரிலீஸாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஏன் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் குழம்பி உள்ளனர். மேலும் ஒரு சிலர் “பொன்னியின் செல்வன்” வெற்றியை பொறுக்காமல்தான் அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளனர்.