ராம்சரண் நடிப்பில் ஷங்கர் படத்தின் தலைப்பு என்ன?

Filed under: சினிமா |

நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் இணையும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி5” படத்தையும் இயக்கி வருகிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இத்திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு “சிஇஓ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.