லோகேஷ் கனகராஜ் பாராட்டிய பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகர் கவினை பாராட்டியுள்ளார். கவின் நடிப்பில் “லிப்ட்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் நடிப்பில் சமீபத்தில், “டாடா” படம் வெளியானது. படத்தில் இவருக்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. தமிழகம் முழுதும் இப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “லியோ” திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனராஜ் படக்குழுவினருடன் காஷ்மீரில் ஷூட்டிங்கில் உள்ள நிலையில், தற்போது “தன் டுவிட்டர் பக்கத்தில், “டாடா” திரைப்படத்தின் நேர்மறை விமர்சனங்கள் பெற்று வருவதற்கு கவினுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.