சந்தானம் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகை ஆகாது பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ படத்தின் First look ரசிகர்களின் மத்தியிலும் , திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது . தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து , அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம் . கதாநாயகனாக நடிபதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம் , இந்த படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார் .இந்த படத்தில் சந்தானத்துக்கு இணையாக ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.
‘ அவரது ஈடுபாடு வியப்புக்குரியது . தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் , ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூட குறைய கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் . நகைசுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம் , நடனம் , சண்டை , காதல் என்று எல்லா காட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார் . ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் தயாரிக்க படும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும் ‘ என்று கூறுகிறார் நகைசுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத் .