வானதி சீனிவாசனின் கோரிக்கை!

Filed under: அரசியல் |

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அரசு விடுமுறை தினமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்துவைப்பதால் இளம் விதவைகள் அதிகரித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.