சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கட்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் கட்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தனது வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசி வாயிலாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியுடன் சமாதானமாக போனால்தான் அரசியலில் நீடிக்க முடியும் என்பதால் ரஜினிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.