விஜய் டயலாக்கை டிரெண்டாக்கிய பாஜக!

Filed under: அரசியல்,சினிமா |

பாஜகவினர் “வாரிசு” திரைப்படத்தில் விஜய் பேசும் வசனத்தை திமுகவிற்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டேகாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த சில காலமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையை முழுவதுமாக படிக்காமல் சில வார்த்தைகளை நீக்கியதும், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுனர் பாதியிலேயே சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஆளுனரை திமுக நடத்திய விதம் குறித்து பாஜக விமர்சித்து வருகிறது. “வாரிசு” திரைப்படத்தில் விஜய் பேசிய “5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்” என்ற வசனத்தை டுவிட்டரில் ஹேஷ்டேகாக டிரெண்ட் செய்து பாஜகவினர் திமுகவை விமர்சித்து அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.