கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான திரைப்பட் “வாரிசு”.
விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் “வாரிசு” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுதும் ரூ.250 கோடி வசூலை பெற்றுள்ளதாக தில்ராஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.